மது போதையில் ரகளை செய்தவர் கைது
பொம்மிடி அருகே மது போதையில் ரகளை செய்தவர் கைது;

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி வினோபாஜ் தெருவை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் சச்சின் குமார் நேற்று மாலை வடசந்தையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் ரகளை ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக தான் பெரிய ரவுடி என்றும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என குரல் கொடுத்து டாஸ்மாக் கடை முன்பு தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் கேட்க அவர்களை கல்லால் தாக்குவதற்காக முயற்சி செய்து உள்ளார் இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொம்மடி உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் காவலர்கள் அவரை பிடித்து கைது செய்தனர். பின்பு வழக்கு பதிந்து விசாரணை செய்த போது மேலும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.