கபிலர்மலை ஒன்றிய திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கபிலர்மலையில் திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-03-24 13:52 GMT
கபிலர்மலை ஒன்றிய திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • whatsapp icon
பரமத்தி வேலூர், மார்ச். 24: பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை ஒன்றிய திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கபிலர்மலையில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபதில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்தி தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் கே கே சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் உமா ராணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.மூர்த்தி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கட்சியினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும், திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். தகவல் தொழில்நுட்ப அணி சார்ந்த பிரதிநிதிகள் திமுகவின் சாதனைகளை வாட்ஸ் அப்,பேஸ்புக் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி மற்றும் நகரம்,ஒன்றியம்,கிளை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News