.ஜனதா கட்சியினர் ஆலோசனை கூட்டம்

காங்கேயத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-03-25 00:24 GMT
.ஜனதா கட்சியினர் ஆலோசனை கூட்டம்
  • whatsapp icon
காங்கேயத்தில் பா.ஜனதா கட்சியினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் சங்கரகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணை தலைவர் துரைசாமி, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு அணி நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிகழ்ச்சிகளை அணி சார்ந்து நடத்துவது, அதன் அறிக்கைகளை தேசிய தலைமைக்கு அனுப்பி வைப்பது என மாநில தலைவர் அண்ணாமலைக்கு வலுசேர்க்கும் வகையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட, மாநில நிர்வாகிகளை புறக்கணித்து விட்டு பா.ஜனதா கட்சி ஆதரவாளர்கள் இக்கூட்டத்தை நடத்தியுள்ளதால் அக்கட்சிக்குள் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News