பாலம்மாள்புரம் மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது.
பாலம்மாள்புரம் மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது.;
பாலம்மாள்புரம் மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது. கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே பாலம்மாள்புரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்ச் 24ஆம் தேதி காலை 9 மணி அளவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அருகாமையில் உள்ள மயானம் அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பது தெரிய வந்தது. இந்த விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆண்டலூர், காலனி தெருவை சேர்ந்த விஜயகாந்த் வயது 34 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 29 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.