கந்தர்வகோட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!
போராட்டச் செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வெள்ளாள விடுதி ஆதி திராவிடர் தெருவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100 மேற்பட்ட கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடிசாலை, வெள்ளாளவிடுதி பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.