மாணவி சீருடைக்காக ஆண் டெய்லர் அளவு எடுப்பதா? போலீசில் புகார்
மதுரையில் மாணவியின் சீருடையை தைக்க அளவு எடுக்க ஆண் டெய்லரை பயன்படுத்தியதால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஒரு ஆண் மற்றும் பெண் டெய்லரை அழைத்துவந்து சீருடைகளுக்கான அளவுஎடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மாணவிகளுக்கு எதற்கு ஆண் டெய்லர் மூலமாக அளவெடுக்க அனுமதிக்கிறீர்கள் என ஆசிரியையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் ஆண் டெய்லர் அளவு எடுத்தால் தன்னால் அளவு எடுக்க முடியாது என பள்ளி ஆசிரியை என்பவரிடம் கூறியதாகவும் ஆனாலும் ஆசிரியை கட்டாயம் அளவு எடுத்துதான் ஆக வேண்டும் என மாணவியிடம் கூறியுள்ளார். அப்போது தான் அடுத்தாண்டு இந்த பள்ளியில் படிக்க போவதில்லை ஏன் எனக்கு அளவு எடுக்க வேண்டும் என கூறியதாகவும், இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போதும் Just Freeயா எடுத்துக்கோ என மாணவியிடம் கூறியதாகவும்., இதனையடுத்தும் ஆண் டெய்லர் தன்னை அளவெடுக்கும் போது தனது அனுமதியின்றி உடல் பாகங்களை தொட்டதால் ஆசிரியை மீதும், டெய்லர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 10 ஆம் வகுப்பு மாணவி மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் ஆசிரியை மற்றும் இரண்டு டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.