100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 4034 கோடியே வழங்காமல் வஞ்சிக்கும் பாஜக அரசை கண்டித்து சுத்தமல்லி விலக்கில் இன்று (மார்ச் 29) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.