தனியார் ஏடிஎம் மிஷினில் கொள்ளை முயற்சி
வேடசந்தூரில் தனியார் ஏடிஎம் மிஷினில் கொள்ளை முயற்சி;
வேடசந்தூர் வடமதுரை ரோட்டில் உள்ள பழைய சாந்தி தியேட்டர் காம்ப்ளக்ஸில் தனியாருக்கு சொந்தமான இஷாப் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வந்த மர்ம நபர் ஏடிஎம் எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாலை நான்கு பத்து மணியளவில் அலாரம் அடிக்க தொடங்கியதால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் தப்பி ஓடி விட்டார். தகவலறிந்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் டிஎஸ்பி தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.