பரமத்தி வேலூரில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.
பரமத்தி வேலூரில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது.;

பரமத்தி வேலூர், மார்ச், 30: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு திமுக மாவட்டச் செயலாளர் கே எஸ் மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் முன்னிலை வகித்தார். வேலூர் பேரூர் கழக நகர செயலாளர் முருகன் வரவேற்பு உரையாற்றினார். பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் மூர்த்தி மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தி திணிக்கும் முடிவையும்,தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததையும் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிராக மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க விடமாட்டோம் என உறுதிமொழியை வாசிக்க கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கூட்டத்தில் பரமத்தி ஒன்றிய செயலாளர் கனராசு,மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தர்,மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் கே கே சண்முகம்,பாண்டமங்கலம் பேரூர் கழக செயலாளர் முருகவேல், வெங்கரை பேரூர் செயலாளர் ராமலிங்கம்,மாவட்ட பிரதிநிதி கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.