காவேரிப்பட்டணம்: நாட்டுப்புற கலைஞர்களின் முப்பெரும் விழா.

காவேரிப்பட்டணம்: நாட்டுப்புற கலைஞர்களின் முப்பெரும் விழா.;

Update: 2025-04-02 12:28 GMT
காவேரிப்பட்டணம்:  நாட்டுப்புற கலைஞர்களின் முப்பெரும் விழா.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்ட பாரதியார் தெருக்கூத்து கிராமிய கலைஞர்கள் நலச்சங்கம் முப்பெரும் விழா காவேரிப்பட்டணத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் புஷ்பலதா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தார். இதில் பம்பை, தெருக்கூத்து, கோலாட்டம், சிலம்பாட்டம் கலைஞர்கள் பாரம்பரிய ஆட்டம் ஆடியவாறு சென்றனர். நிகழ்ச்சியில் மூத்த கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைகள் பள்ளிகளில் கற்பிக்க அரசு ஆதரவு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News