மின் நுகர்வோரின் புகார் குறித்த சிறப்பு முகாம்.
பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோரின் புகார் குறித்த சிறப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.;

பரமத்தி வேலூர், ஏப். 3: பரமத்திவேலூர் மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் வரதராஜன் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைமையகத்தின் அறிவுறுத்தலின்படி மின் நுகர்வோர்களின் மின் கட்டணம் தொடர்பான புகார்கள், பழுதடைந்த மின் அளவிகள் குறித்த புகார்கள், பழுதடைந்த மின் கம்பங்கள் குறித்த புகார்கள் மற்றும் குறைந்த மின் அழுத்தம் தொடர்பான புகார்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை மறுநாள் (5-ந் தேதி) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் பரமத்திவேலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மேற்குறிப்பிட்ட புகார்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து பயன் பெறுமாறு கூறியுள்ளார்.