கொடைக்கானலில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சிகள்
கொடைக்கானலில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு நீர்வீழ்ச்சிகள் காணப்படுகிறது மேலும் கடந்த சில மாதங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது அதன் காரணம்மாக நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வரண்டு காணப்பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பெய்த கன மழையின் காரணமாக கொடைக்கானல் நூளைவாயில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி , பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் வார விடுமுறையை கொண்டாடுவதற்கு கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் நண்பர்களுடன் குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.