வடபழனி ஆண்டவர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிலிக்கல்பாளையத்தில் வடபழனி ஆண்டவர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2025-04-05 15:17 GMT
பரமத்திவேலூர், ஏப்.5: பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜ யகிரி வடபழனிஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவை யொட்டி நேற்று முன் தினம் இரவு சாமி மற் றும் கொடிக்கம்பத் திற்கு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடை பெற்றது. இதையடுத்து வருகிற 10-ந் தேதி வரை தினமும் சாமி மயில், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி யும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறு கிறது. 11-ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சாமி திருத்தேருக்கு எழுந்தருளும், மாலை 4 மணிக்கு திருத் தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 12-ந் தேதி சத்தாபரணம், கொடி இறக்குதலும், 13-ந் தேதி மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜனனி, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

Similar News