செல்போன் அடிமைத்தனத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேடசந்தூர் தனியார் தொடக்கப்பள்ளியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் செல்போன் அடிமைத்தனத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி;

Update: 2025-04-05 16:30 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு மாணவிகள்  ஹரிணி சைனிகா, ஜனனி ஜெயஸ்ரீ,கமனி,கலாவதி,மாலதி, ஹரிணி,மீனா, நிவேதா,நர்மதா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் செல்போன் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் நண்பர்களை விட்டு தனிமைப்படுத்துதல், தனிப்பட்ட உறவுகளால் நெருக்கடியான சூழல், ஸ்மார்ட்போனை சரிபார்க்க தொடர்ந்து விழித்தெழுதல் கண் பிரச்சனைகள், பள்ளியில் கல்வியில் கவனம் செலுத்துதல் குறைதல், போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

Similar News