தனி நபர்களின் பிரச்சினையால் ஜமாத்திற்கு அவப்பெயர்
சூலபுரம் பகுதியில் 10 பேர் மீது வழக்கு பதிவு - தனி நபர்களின் பிரச்சினையால் ஜமாத்திற்கு அவப்பெயர்... சூலபுரம் ஜமாத்தார்கள் பேட்டி;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சூலபுரம் பகுதியில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சூலபுரம் பள்ளிவாசலில் அப்துல் ஹை என்பவர் கடந்த 9 வருடங்களாக முத்தவல்லியாக செயல்பட்டு வருகிறார். மேலும் தமிழ்நாடு முஸ்லிம் வெல்ஃபேர் சொசைட்டியின் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான அன்சாரி என்பவருக்கும் குடும்ப ரீதியாக பிரச்சனை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக 31.3.2025 அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை முடித்துவிட்டு வரும்பொழுது அப்துல் ஹை என்பவரை அன்சாரி தரப்பினர் வேண்டுமென்றே அவரிடம் பிரச்சனை செய்து தகாத வார்த்தைகளால் பேசி பள்ளிவாசல் சொத்தை திருடுகிறாய் எனக்கூறி அவர்களுக்குள் கைகலப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக இரு தரப்பினர் மீதும் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் ஹை என்பவர் சமூக ஆர்வலராகவும் சூலபுரம் பகுதிக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருவதாகவும் அறக்கட்டளை மூலம் திருமண உதவித் தொகை, கல்வி உதவி தொகை மருத்துவ உதவி, இயலாதோர்க்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றார். இவர் கடந்த 9 வருடங்களாக சூலபுரம் மஸ்ஜித் ஜும்மா பள்ளிவாசலில் முத்தவல்லியாக தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவதை கெடுக்கும் விதமாக அவரது உறவினர் வேண்டுமென்றே அவரிடம் தகராறு செய்து அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த பிரச்சனையின் போது சம்பவ இடத்தில் இல்லாத நபர் மீதும் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவரது குடும்பத்தை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் சூலபுரம் பள்ளிவாசலின் ஜமாத்தார்கள் தெரிவித்தனர். அதேபோல் பள்ளிவாசலில் கணக்கு வழக்குகள் எல்லாம் சரியாக உள்ளது இவர்களது பிரச்சனைக்கும் ஜமாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தங்களது குடும்பப் பிரச்சினையை ஜமாத் பொறுப்பில் இருப்பதால் வேண்டுமென்றே அவரை இழுத்து விடுவதாக தெரிவித்தனர். மேலும் பள்ளிவாசலின் கணக்கு வழக்குகள் அனைத்தும் வெளிப்படையாக பள்ளியில் உள்ளது என்றும் யாராக இருந்தாலும் நேரடியாக வந்து பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர். ஜமாத் நிர்வாகத்திற்கும் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.