உரூஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வேடசந்தூரில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது;

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள மகான் அரபு அவுலியா தர்காவில் 236-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடத்தி கொடியுடன் கூடிய 70 அடி உயர கம்பம் ஊன்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் புட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது கம்பளம் போர்த்தி, வாசக மாலையை வேடசந்தூர் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று மீண்டும் தர்காவிற்கு கொண்டு வந்தனர். அப்போது வழிநெடுகிலும் பெண்கள் குதிரையின் கால்களில் தண்ணீரை ஊற்றி, வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிறுவர்களின் சிலம்பம், நெருப்பு சிலம்பம், வாயில் நெருப்பு ஊதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.