பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிக்கூண்டு பகுதியில் மாவட்ட காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் புதிதாக கட்டப்பட்டது. அதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (06.04.2025) ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முகமது அலியார், மாநகராட்சி மண்டல தலைவர் கார்த்திக், பகுதி செயலாளர்கள் அப்பாஸ் மந்திரி, நாகலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பாரதி, திண்டுக்கல் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், சுமதி, சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜ், பொது கணக்கு குழு உறுப்பினர் சிவாஜி, அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.