பாலாறு அன்னையிற்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்ட பாலாறு விவசாயிகள் சங்கத்தினர்
பாலாறு அன்னையிற்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்ட பாலாறு விவசாயிகள் சங்கத்தினர்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு பாலாறு அன்னையிற்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்ட பாலாறு விவசாயிகள் சங்கத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ திருமால், முருகன் கோவிலில் பாலாறு பாதுகாப்பு சங்கங்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கம் சார்பில், தலைப்பாலாறு சங்கம் உருவாக்கப்பட்ட தினத்தையொட்டியும், நம்மாழ்வார் பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து பாலாறு - மண்ணாறு இணையகூடிய ஆற்றுப்பகுதியில் பாலாறு படுக்கையில் உள்ள விவசாயிகள் பாலாறு அன்னையிற்கு பாலாபிஷேகம் செய்து பாலாற்றில் தொடர்ந்து நீர் வர வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பாலாறு படுக்கையில் உள்ள விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.