
நெல்லையில் கடைகள்,வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை அரசு செயல்படுத்தி கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 2வது வாரத்திற்குள் 100% பெயர் பலகை வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.