குமரி ஆனந்தன் மறைவிற்கு சபாநாயகர் இரங்கல்
சபாநாயகர் அப்பாவுவின் இரங்கல் அறிக்கை;

காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் இன்று உயிரிழந்தார்.அவரின் மறைவை தொடர்ந்து ராதாபுரம் எம்எல்ஏவும் தமிழக சபாநாயகருமான அப்பாவு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் இலக்கியவாதியுமான குமரி ஆனந்தன் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியை தருகின்றது.பொது வாழ்வுக்காக அர்ப்பணித்துக் கொண்ட அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.