கல்லிடைக்குறிச்சியில் வெப்பத்தினால் சாலைகளில் குறைந்த மக்கள் நடமாட்டம்
நெல்லையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு;

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு காணப்படுகின்றது.இதன் காரணமாக பொதுமக்கள் அனாவசியமின்றி சாலைகளில் வலம் வருவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.