முதல்வரை சந்தித்த அம்பாசமுத்திரம் திமுக பிரமுகர்
திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பிரபாகரன்;

திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அம்பாசமுத்திரத்தை சார்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார். மேலும் சட்ட மசோதாக்களை அரசியல் சாசனத்திற்கு எதிராக நிறுத்தி வைத்த தமிழக ஆளுநரின் செயலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு தமிழக முதல்வரிடம் பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.