
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தம் வழங்க டெல்லி ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து உள்ளதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்க்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.