
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 9) கொண்டாநகரத்தின் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் மாணவர்கள் ஏராளமானோர் படையெடுத்து நீர்,மோர்களை வாங்கிய அருந்தி சென்றனர்.