தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்;
இன்று தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் மாநில அளவிலான கண்டன போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று மத்திய அரசை கண்டித்து CITU. AITUC, LPF, INTUC, HMS, AICCTU , உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்துக,கணக்கு பரிமாற்றம் மற்றும் வட்டி கணக்கீட்டில் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்து, அனைவருக்கும் DA வுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.9000/- வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்து தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கு பெற்றனர்.