வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் தர்மபுரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு;
தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மணிவண்ணன் அழகுமுத்து, மாதேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் மொத்தம் 408 பேர் வாக்களித்தனர். தேர்தல் ஆணையராக கோபாலகிருஷ்ணன் தேர்தலை நடத்தினார். இதில் தலைவராக போட்டியிட்ட அழகுமுத்து புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை தலைவராக குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இணை செயலாளராக சங்கீதா, பொருளாளராக கார்த்திகேயன் நூலகராக ஜெயலட்சுமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு பட்டாசு வெடித்து மாலைகள் அணிவித்து சால்வை அணிவித்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது இதில் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.