திருப்பத்தூர் மாவட்டம் இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபாடு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மான்காணூர் கிராமத்தில் வசியப்பவர் சுப்பிரமணி இவர் விவசாயம் செய்து வந்த நிலையில் இவரது மனைவி ஈஸ்வரி வயது 55 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் பிரிவை தாங்காமல் கணவர் சுப்பிரமணி மனைவிக்கு தனது வீட்டின் அருகே சிலை வைத்துள்ளார். ஆண்டும் தோறும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பட்டுப்புடவை வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு தனது மனைவி சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் ஆயிரம் பேருக்கு புடவை வழங்கினார்.