குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயிலில் தெப்போற்சவம் நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது.
