கண்டெய்னர் லாரியை சிறை படித்த பொதுமக்கள்
ஈரோடு சாஸ்திரி நகரில் மின்தடைக்கு காரணமான கண்டெய்னர் லாரியை சிறைப்பிடித்த மக்களால் பரபரப்பு;
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நிஜாம் (38) என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் செல்ல வழி தெரியாமல், ஈரோடு சாஸ்திரி நகர் மேம்பாலம் வழியே சாஸ்திரி நகருக்குள் நுழைந்தார். அங்கு விநாயகர் கோவில் அருகே உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்று இருந்தது. அந்தக் கம்பத்தில் இருந்த ஒயரில் லாரி நேற்று மதியம் மோதியது. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கண்டெய்னர் லாரியை சிறை பிடித்தனர்.இத்தகவலை மின்வாரியத்துக்கு தெரிவித்தனர். மின்வாரிய அலுவலர்கள் அங்கு வந்ததும் லாரியை ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். மின் வினியோகம் சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டதால் மக்களும் அங்கிருந்து கலந்து சென்றனர்.