பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த ரெண்டு மையங்கள் அமைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுவிடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு;

Update: 2025-04-19 13:12 GMT
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 117 மையங்களில் 24,854 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 1,066 பேரும் தேர்வு எழுதினர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் சீலிடப்பட்ட அறையில் வைத்து, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விடைத்தாள் திருத்துவதற்காக மாவட்டத்தில் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி மற்றும் கோபி வைர விழா ஆகிய 2 பள்ளிகள் மையமாக அமைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் தேதி இதுவரை அறிவிக்கப்பட வில்லை. தற்போது, அனைத்து விடைத்தாள்களும் ஒன்றோடு ஒன்று பரிமாற்றம் செய்து வேறு மாவட்ட விடைத்தாள்கள் பெறப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாகவும், விடைத்தாள் திருத்தம் பணி தொடங்கியதும் அதற்கான மதிப்பெண்கள் உடனுக்குடன் கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் வசதியும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஈரோடு யு.ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திண்டல் பாரதி வித்யா பவன் பள்ளி, கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய மூன்று மையங்கள் நடந்து வருகிறது. ஓரிரு நாளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு செய்யப்படும். அதனைத்தொடா்ந்து பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Similar News