தாளவாடி அருகே பள்ளிக்கூட சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை பொதுமக்கள் அச்சம்

தாளவாடி அருகே பள்ளிக்கூட சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை பொதுமக்கள் அச்சம்;

Update: 2025-04-21 03:01 GMT
தாளவாடி அருகே பள்ளிக்கூட சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை பொதுமக்கள் அச்சம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்ப குதியில் இருந்து கிராமத்துக்குள் யானைகள் புகுந்து விடும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி தாளவாடியை அடுத்த இக்களூர் கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்தது. பின்னர் அந்த யானை அங்கி ருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தின் சுற்றுக் சுவரை இடித்து தள்ளியது. மேலும் அங்கிருந்த இரும்பு கதவையும் தள்ளிவிட்டு சேதப்படுத்தி உள்ளது. பின்னர் அங்கிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.கிராமத்துக்குள் புகுந்து பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை காட்டு யானை இடித்து தள்ளியதால் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News