ஈரோட்டில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன் முடியை பதவி நீக்கம் செய்ய அதிமுக ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-21 06:46 GMT
வனத்துறை அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிராக இழிவாக பேசியதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் அமைச்சர் மற்றும் ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் கே வி ராமலிங்கம் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஈனபிறவி பொன்முடி. நீதிமன்ற தீர்ப்புப்படி அவர் பதவி விலகியவர் ஆனால் துரதிஷ்டவசமாக அவர் மீண்டும் பதவி ஏற்க நீதிமன்றமே உத்தரவிட்டது. அவர் தொடர்ந்து பெண்கள் எதிராக இழிவாக பேசுவதில் வல்லவர் முன்பு ஓ சி பஸ் என்று பெண்களை கிண்டலடித்தார்.திமுக கட்சியை அடியோடு ஒழிக்கா விடில் வருங்கால சமுதாயம் பாதிக்கப்படும். அம்மா ஆட்சியில் லேப்டாப் மாணவர்களுக்கு தந்தார்கள். அதையும் நிறுத்தி விட்டார்கள்.ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு தருவதாக கூறுகிறார்கள். ஆனால் இன்று 60 சத மாணவர்கள் போதைப்பொருள் அடிமையாகும் நிலை உள்ளது. ஏனென்றால் பள்ளி கல்லூ ரிகள் முன்பு கஞ்சா விற்கப்படுகிறது. பொன்முடியை கட்சி பதிவி பதவியில் இருந்து மட்டும் நீக்கி உள்ளார்கள் மந்திரி பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்.அவருடைய பேச்சு அவரது கட்சியை சேர்ந்த கனிமொழிக்கே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் விடுத்த அறிக்கை அடிப்படையில் தான் கட்சிப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.நீட் தேர்வுக்கு கையெழுத்து விட்டது திமுகவின் சுகாதாரத் துறை இணை அமைச்சராக மன்மோகன் சிங் அமைச்சரவையில் இருந்த காந்தி செல்வன் தான். ஆனால் இன்று நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது போல் நாடகம் ஆடுகிறது. சட்டமன்ற த்தில் நீட்டுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே எடப்பாடி அவர் ஒருவர் தான் நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்ற த்தை அணுகினார் .நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தனக்கு தெரியும் என்று திமுக தேர்தல் பிரச்சாரம் செய்து மக்களின் வாக்குகளை வாங்கினார்கள். ஆனால் நான்காண்டுகள் ஓடிவிட்டன. அந்த ரகசியத்தை அவர்கள் வெளியிடவில்லை. தற்போது மக்களை ஏமாற்று வகையில் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள். இதுவரை 22 குழந்தைகள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆனால் நீட்டை ஒழிப்பது போல சட்டமன்றத்தில் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார். அதனால் என்ன பயன்? இவ்வாறு மீண்டும் மக்களே ஸ்டாலின் ஏமாற்றுகிறார். வெறும் தீர்மானம் கொண்டு வந்தால் நீட் ஒழிந்து விடுமா? அதிமுக மகளிர் அணி செயலாளர் மல்லிகா பரமசிவம் முன்னால் எம்எல்ஏக்கள் பூந்துறை பாலு, கே எஸ் தென்னரசு, ஜெ பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார சின்னையன், முன்னாள் மண்டல தலைவர் கேசவமூர்த்தி முன்னாள் ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் முன்னாள் கவுன்சிலர்பரிமளா ராஜேந்திரன் இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் உட்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News