அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் முன்னாள் அமைச்சர் தகவல்

அதிமுக தலைமையில் விரைவில் மெகா கூட்டணி அமையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் பல்லடம் எம்எல்ஏ எம் எஸ் எம் ஆனந்தன் கூறினார்.;

Update: 2025-04-21 07:31 GMT
அதிமுக தலைமையில் விரைவில் மெகா கூட்டணி அமையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் பல்லடம் எம்எல்ஏ எம் எஸ் எம் ஆனந்தன் கூறினார்.அவர் தலைமையில் அக்ரஹாரம் கிருஷ்ணம்பாளையம் பகுதி பூத் கமிட்டி கூட்டம் ஈரோட்டில் ஞாயிறன்று நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது: அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியையும் தற்போதைய ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் ஏங்கும் நிலை உருவாகியுள்ளது. நான்காண்டு ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கிய நிதியையும் திட்டங்களையும் இப்போது முடித்துள்ளார்கள். ஆனால் அத்திட்டங்களை திமுக கொண்டு வந்தது போல திறப்பு விழா செய்து கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பொய்யான 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் 20 சத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. இடையில் சில தோய்வு ஏற்பட்டாலும் இன்று கட்சி மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது. எனவே அதிமுக ஆட்சி வருவது உறுதி என்று மக்களே சொல்கிறார்கள். 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பேரும் நிலை உருவாகியுள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணி உருவாகியுள்ளது. பல்வேறு கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம். கூட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் பேசியதாவது: திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு கட்டுமான பொருட்கள் விலை உயர்வு சொத்து வரி உயர்வு எல்லாத் துறையிலும் ஊழல் ஜானகி என மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிமுக ஆட்சியில் மாவட்டத்தில் 100 டாஸ்மாக் கடை இருந்தது. இப்போது 120 கடைகள் உள்ளன. தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் அம்மா வழங்கினார். அத்திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்கள். அதையும் நிறுத்திவிட்டார்கள். தற்போது மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் தருவதாக கூறுகிறார்கள். ஆனால் எங்கு பார்த்தாலும் போதைப்பொருட்கள் விற்பனை ஆகிறது. எனவே குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வருங்கால சமுதாயம் போதைக்கு அடிமையாகாமல் இருக்க 2026 தேர்தலில் எடப்பாடியார் முதல்வராக வேண்டும். கட்சி நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு ராமசாமி முனியப்பன் முருகேசன் பழனிசாமி கேசவமூர்த்தி எம் ஜி பழனிசாமி இரா மாரிமுத்து தங்கமுத்து கோவிந்தராஜ் லிங்கேஸ்வரன் ரத்தன் பிரிதிவி சதீஷ் சிவக்குமார் ஜெகதீஷ் காவேரி செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News