ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தர்ணா போராட்டம்!

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்!;

Update: 2025-04-22 09:43 GMT
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மின்வாரிய நிரந்தர பணியாளர்கள், கேங்மேன் ஒப்பந்த பணியாளர்கள், பகுதி நேர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டுத்தொடரில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 65 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக ஆக்கிட வேண்டும், மின் வாரியத்தை பொதுத்துறையாக தொடர செய்ய வேண்டும், தனியார் மயப்படுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தூத்துக்குடி மின்பகிர்மான கிளை சார்பில் தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு திட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, திட்ட செயலாளர் குன்னிமலையான், ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் ஜெயபாண்டி, நிர்வாகிகள் ரவி தாகூர், யோவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News