மதுக்கடைகளை அகற்றக்கோரி மனு
மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு எஸ் .பி அலுவலகத்தில் மக்கள் மனு;
ஈரோடு முத்தம் பாளையம் பகுதி சேர்ந்த பொதுமக்கள் இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து எஸ்.பி. சுஜாதாவை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் ஈரோடு வட்டம் சென்னிமலை ரோடு முத்தம்பாளையம் ஊரில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் மதுபான விற்பனை கடை செயல்பட்டு வந்தது. இதனை இடமாற்றம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் பயனாக இந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையால் அந்த மதுபான கடை மூடப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடத்தில் மதுபான மற்றும் தனியார் குளிர் மதுபான கடை பதிவு செய்து வர உள்ளதாக தகவல் வந்துள்ளது. குடியிருப்பு பகுதிகள் கோவில் குளம் கீழ்பாவணி வாய்க்கால் பாசனம் என உள்ள பகுதியில் மீண்டும் மதுபானம் கடை வந்தால் பிரச்சனை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் புதிதாக மதுபான கடையோ தனியார் குளிர் மதுபான கடையோ அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.