கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு பெண் சாலை மறியல்

ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு;

Update: 2025-04-22 13:41 GMT
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வரலட்சுமி என்பவர் கணவர் அய்யப்பனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.வரலட்சுமி மற்றும் அவரது மகள் ஆகியோர் அய்யப்பனுக்கு எதிராக கடந்த 2014ம் ஆண்டு ஈரோடு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வரலட்சுமி மற்றும் அவரது மகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக அய்யப்பன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.ஆனால் இதுவரை ஜீவனாம்சம் வழங்காமல் இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதால் காவல்துறை பிடிவாரண்டை நிறைவேற்றி ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என பல ஆண்டுகளாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.சுமார் அரைமணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்ட வரலட்சுமியிடம் போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்து முடியாததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News