தடுப்பு சுவர் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மழை ஈரப்பதத்தால் மண் சரிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள இருட்டிபாளையம் பாலம்;

Update: 2025-04-22 15:28 GMT
ஈரோடு மாவட்டம் கடம்பூரில் இருந்து இருட்டிபாளையம் வழியாக கரளியம்- கேர்மாளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருட்டிபாளையம் பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த பாலத்தின் வழியாக செல்லும் சாலையில், பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் மண் சரிவு ஏற்பட்டவாறு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சாலையின் இருபுறமும் மழை ஈரத்தால் மண் சரிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், சாலையின் ஒரு புறத்தில் கிணறு ஒன்று உள்ளது. நாள்தோறும் அந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள், மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. அதுவும் சாலையில் கனரக வாகனங்கள் சென்றால் சாலை வழுவிழந்து வாகனம் கிணற்றை நோக்கி சரிந்து விழும் அபாயம் கூட உள்ளது. அதனால் பாலத்தில் இருந்து சிறிது தூரம் வரை இருபுறம் உள்ள இடங்களை பலப்படுத்தி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News