போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது;
ஈரோடு, மரப்பாலம், குயவன் திட்டு பாலம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு, அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், மரப்பாலம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (23) என்பதும், அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த 290 கிராம் கஞ்சா போதை மாத்திரைகள் 4, சிரிஞ்சு மற்றும் ஊசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.