கஞ்சா விற்ற மூன்று பேர் கைது
கோபி அருகேகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது 3 கிலோ கஞ்சா பறிமுதல்;
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோபி அடுத்த நரசபுரம் பள்ளத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து, சிலர் விற்பனை செய்து வருவதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திருலோகசந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து அவரை விரட்டிப் பிடித்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் கே.என்.பாளையம் அம்ம நகரை சேர்ந்த மகேஸ் ( 29) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, மகேஸை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ரூ.31 ஆயிரம் மதிப்பிலான 3.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நம்பியூர் அடுத்த வடுகம்பாளையத்தைச் சேர்ந்த பூங்கொடி என்பவரை கைது செய்த வரப்பாளையம் போலீசார், அவரிடம் இருந்த ரூ.3,500 மதிப்பிலான 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.