ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் தற்கொலை
கோபிசெட்டிபாளையம் அருகே விருப்ப ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை;
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அடுத்த குப்பாண்டார் வீதியை சேர்ந்தவர் தனசேகர் (49). கோபியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனசேகர் தான் பார்த்து வந்த கூட்டுறவு வங்கி வேலையை விருப்ப ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து வேலையை அவசரப்பட்டு விட்டு விட்டோமே என்ற மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது உறவினர்கள் நண்பர்களிடம் தனசேகர் கூறி புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனசேகர் மின்விசிறியில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே தனசேகர் இறந்து விட்டதாக தெரிவித்தார். தற்கொலை செய்து கொண்ட தனசேகருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.