புஞ்சைபுளியம்பட்டி அருகே மொபட்டில் இருந்து கீழே விழுந்து விவசாயி சாவு

புஞ்சைபுளியம்பட்டி அருகே மொபட்டில் இருந்து கீழே விழுந்து விவசாயி சாவு;

Update: 2025-04-27 04:36 GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே மொபட்டில் இருந்து கீழே விழுந்து விவசாயி சாவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே வரப்பாளையத்தை சேர்ந்தவ மாரப்பன் (வயது 75). விவசாயி. நேற்று முன்தினம் இர மாரப்பன் மொபட்டில் சென்றுகொண்டு இருந்தார். அப்போபோது பெருச்சானூர் பிரிவு அருகே காவலிபாளையத்தைசேர்ந்த நஞ்சப்பன் என்பவர் நடந்து சென்றுகொண்டு இருதார். அவர் மீது திடீரென மாரப்பன் ஓட்டிவந்த மொபட் மோதிவிட்டது. இதனால் மொபட்டில் இருந்து மாரப்பன் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருவருக்குமே படுகாயட ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இவரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் செலும் வழியிலேயே மாரப்பன் உயிரிழந்து விட்டார். நஞ்சப்பன். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News