திருக்குவளையில் கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில்

திமுக  அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்;

Update: 2025-05-16 05:46 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை கடைவீதியில், திமுக கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில், திமுக  அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் சோ.பா.மலர்வண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் என்.கௌதமன் கலந்து கொண்டு, திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து நிறைவேற்றப்பட்ட மக்களுக்கான திட்டங்களையும், நான்கு ஆண்டுகள் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு  பேசினார். கூட்டத்தில், கீழ்வேளூர் தொகுதி பார்வையாளர் ரா.சங்கர், தலைமை கழக பேச்சாளர் ஆரூர் ஜோதி, பொதுக்குழு உறுப்பினர்கள் இல.பழனியப்பன், கே.சி.குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர் .

Similar News