லளிகத்தில் தர்மபுரி எம்பி ஆய்வு
நல்லமபள்ளி வட்டத்துக்குட்பட்ட லளிகம் ஊராட்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு;
இன்று 17-05-2025 தருமபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம், இலளிகம் ஊராட்சியில் குடிநீர்வசதி , கழிவு நீர் கால்வாய், சிமெண்ட் சாலை வேண்டி பொதுமக்களின் தொடர்கோரிக்கையை ஏற்று தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP உடனடியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சிமெண்ட்சாலை , குடிநீர் உள்ளிட்ட வசதியை உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ் சண்முகம் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம்,பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ்,சரஸ்வதி துரைசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் லதா பச்சையப்பன்,LM பொன்னுசாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் MP.கௌதம் ,ஊர் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்