புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீ சார் ரோந்து பணியின் போது கைது நடவடிக்கை மேற் கொள்கின்றனர். புதுக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது மேட்டுப்பட்டி பகுதியில் கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கருப்பையாவை (வயது 50) போலீசார் கைது செய்தனர்.மேலும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.