தேமுதிகவின் முதலாம் ஆண்டு மே தின பேரணி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் முதலாம் ஆண்டு மே தின பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது.;

Update: 2025-05-24 16:54 GMT
. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தலின்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுறையில் முதலாம் ஆண்டு மே தின பேரணி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் பண்ணை சொ.பாலு தலைமையில் நடைபெற்ற மே தின பேரணியை மாநில கழக துணை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். செந்தில்குமார் பேரணியை துவக்கி வைத்து கலந்து கொண்டார். அருணா பெட்ரோல் பங்க் அருகில் துவங்கிய பேரணி காமராஜர் சாலை, கண்ணார தெரு வழியாக சென்றது வழிநெடுக்கிலும் வணிகர்கள், மாற்று கட்சியினர், மருத்துவ சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். வான வேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி நிறைவாக சின்ன கடைவீதியில் நிறைவடைந்தது. மாவட்ட செயலாளர் மற்றும் கழக துணை செயலாளர் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர், தொழிற்சங்க அணியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News