வந்தவாசி : எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்.

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முன்னிலை வகித்தார்.;

Update: 2025-05-26 06:31 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் திமுகவில் பாதூர், கீழ் கொடுங்கலூர், அதியனூர்,கீழ்சீசமங்கலம் கிராமத்தில் பல்வேறு கட்சியை, சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம் எஸ் தரணிவேந்தன் தலைமையிலும், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முன்னிலையிலும் திமுகவில் இணைந்தனர். உடன் திமுக ஒன்றிய செயலாளர் கீழ் கொடுங்காலூர் பழனி, நகர செயலாளர் தயாளன், மதன்குமார், ஒன்றிய இளைஞரணி வினோத், மருதாடு சந்திரன், காரம் முத்து ரமேஷ், புண்ணியகோட்டி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News