பவானிசாகரில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பவானிசாகரில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு;
பவானிசாகரில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 46-ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1978-79 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 46 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஷாஜஹான் முன்னிலை வகித்தார். இதில் 1974-79 ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் சண்முகவேல், கந்தசாமி, முருகன், தேவராஜ், ராஜரத்தினம், சக்திவேல், மற்றும் வேதநாயகி ஆகியோர் சிறப்புரிமை அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் சென்னை, கோவை, சத்தி, போன்ற வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்தும் சுமார் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். பல மாணவர்கள் 1979-ஆம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்து விட்டு வெளியூர்களில் செட்டில் ஆகிவிட்டனர். 46-ஆண்டுகள் கழிந்து மீண்டும் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தனர். முன்னதாக சோமசுந்தரம் வரவேற்றார். முடிவில் பன்னிர்செல்வம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சண்முகமணி செய்து இருந்தார். போட்டோ விளக்கம்.. பவானிசாகர் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த ஆசிரியர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.