அதிகாரி மிரட்டுவதாக விவசாயி புகார்

வயலுக்கு செல்லும் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து வருவாய்துறையினர் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம்    மாற்றுத்திறனாளி   புகார்;

Update: 2025-05-28 14:01 GMT
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில்   கழனிவாசல் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ரவி  தமது   நிலத்திற்கு செல்லக்கூடிய நீர்வழி புறம்போக்கு பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்தள்ளதை  அகற்ற  மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோத அவர் வருவாய்துறையினர் நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்தார்.     அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், புகார் அளித்த தன்மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக  காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் என்று வருவாய் துறையினர் மிரட்டுவதாக மாவட்ட ஆடசியரிடம் புகார் தெரிவித்தார்.. இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார்.

Similar News