கோழி மாட்டு கழிவுகளை பொதுவெளியில் கொட்டும் அவலம்
தரங்கம்பாடி உப்பனாற்று கரையோரம் வெளி மாநில மாட்டிறைச்சி கழிவுகளும் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் அவலம்.;
மயிலாடுதுறை அருகே .தரங்கம்பாடி உப்பனாற்றங்கரையில் இரயில் பாதையில் இரவு நேரங்களில் கோழி இறைச்சிக் கழிவுகள் மற்றும் மாட்டிறைச்சி கழிவுளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது, இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றத்தை கடந்தே பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம்,அரசு மருத்துவமனை,காவல் நிலையம் என செல்ல வேண்டியுள்ளது- வெளி மாநிலமான ஊரான காரைக்கால் பகுதியிலிருந்து மாட்டிறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்