திமுக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞர் அணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் அறிமுக கூட்டத்தில் - சமூக வலைதளம் மூலம் திமுக சாதனை விழிப்புணர்வு;

Update: 2025-05-28 14:12 GMT
மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ, தலைமையில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மருது மாநில பொறுப்பாளர்கள் விக்னேஷ், பாலா ஆகியோர் பங்கேற்றனர். , திமுக அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சமூக வலைதளம் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்து திமுக அரசின் சாதனையை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவது,  கட்சியை வழிநடத்தும் முறைகள், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் அணியினர் எவ்வாறு செயல்பட வேண்டும், இளைஞர் அணியின் பங்களிப்பு குறித்தும் சிறப்புரையாற்றினர்.  தேமுதிக பொறுப்பாளர் கலாநிதி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.

Similar News